நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தில் சிறார்களுக்கான நிகழ்வு நாளை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வாழ்விற்கான பேரொளி வாசிப்புஎனும் நிகழ்வு நாளையதினம் (25.05.2024 ) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வாழ்விற்கான பேரொளி வாசிப்புஎனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ளஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம், கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 6 இல் இடம்பெறும்.

நிகழ்வின்  வளவாளராக நெடுந்தீவு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. டானியல் பிராங்கன் நிஷாந்தினி அவர்கள் கலந்துகொள்கின்றார்.

இந் நிகழ்விற்கான அனுசரனை மற்றும் ஆலோசனைகளை வள்ளித் தமிழ் அமுதம் செயற்பாட்டு குழுவினர் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article