நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றையதினம் (ஜூலை 10) வியாழக்கிழமை காலை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் ஆரம்பப் பிரிவு சிறார்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றது.

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய இரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம், கதை கூறல்மற்றும் தனிநபர் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின்அமர்வு – 14 இல் இடம்பெற்றது

நிகழ்வின் வளவாளராக நெடுந்தீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் யே. ஜீவராஜ் அவர்கள் கலந்து கொண்டதுடன், அவருடன் இணைந்து இசை பணியினை நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி அலுவலர் கமாலியல் தியாக்குமார் அவர்கள் வழங்கி மாணவர்களை சிறப்பாக வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி”வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல்மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.