நெடுந்தீவு கிழக்கு காலிங்கிலாம்புலவு ஞானவைரவர் ஆலய சித்திரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காலிங்கிலாம்புலவு ஞானவைரவர்ஆலய சித்திரா பௌர்ணமி தின சிறப்பு பூசை வழிபாடுகள் இன்றையதினம்    (ஏப். 23) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது சிறப்பு பொங்கல் இடம்பெற்றதுடன் அன்னதானம் , சித்திரைக் கஞ்சி என்பனவும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதுடன் பெருமளவு பக்தர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்  ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருச்சுரேஸ்வரம் சிவன் ஆலயத்திலும் பௌர்ணமிதின சிறப்பு பூசையும்  இறந்த அன்னையர்களின் பிதிர்கடன் தீர்க்கும்  வகையில் சிவனுக்கான சிறப்பு அர்ச்சனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article