நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல் என்பன இன்று (26/11) காலை கடற்படை கப்பலூடாக இரு பவுசர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நெடுந்தீவு பல நோ.கூ.சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பத்தத்தின் அடிப்படையில் நெடுந்தீவு பல நோ.கூ.சங்க வளாகத்தில் அரசநிதி ஊடாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டு ஒப்பந்தகாரரால் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது


இந்தநிலையில் டீசல் 13200 லீற்றர், மண்ணெண்ணெய் 19800 லீற்றர், பெற்றோல் 6609 லீற்றர் என்ற அளவுகளில் கொண்டுவரப்பட்டு நிர்மானிக்கப்பட்ட கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளது
கடற்படையினரின் தரையிறங்கு கலத்தில் குறித்த எரிபொருட்கள் நிரப்பிய இரு பவுசர்கள் காங்கேசந்துறை துறைமுகத்தில் வைத்து ஏற்றப்பட்டு நெடுந்தீவை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.