நெடுந்தீவு உள்ள கடற்படையினரின் ஆடை உற்பத்தி நிலைய ஆண்டு விழா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் உள்ள கடற்படையினரின்  ஆடை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 14ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நெடுந்தீவு புனிதசவேரியார் ஆலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்றையதினம் (செப். 15) நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் கடற்படை அதிகாரிகள், ஆடைத் தொழிற்சாலை பொறுப்பு அதிகாரிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ் ஆடை உற்பத்தி நிலையம் ஊடக நெடுந்தீவைச் சேர்ந்த யுவதிகள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதுடன், தங்களது வாழ்வாதாரத்தினை உயர்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

Share this Article