நெடுந்தீவு உதைபந்தாட்டத் தொடர் – DFL 2025 வீரர்கள் ஏல நிகழ்வு நாளை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவின் உதைபந்தாட்டத் தொடர் DFL 2025 இற்கான வீரர்களைத் தேர்வு செய்யும் ஏல நிகழ்வானது நாளையதினம் ( மே25 – ஞாயிறு) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபை தங்கும் விடுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தொடரில் பங்குபெறும் 06 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும்உரிமையாளர்களால் அணியில்  தக்க வைக்கப்பட்ட வீரர்கள் ஆகியோர் கலந்துகொள்ளுமாறு  ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இளைஞர்கள் தனித்தனி கழகம் சார்ந்து இருந்தாலும் அவர்களை வருடத்துக்குஒரு முறை ஒன்றிணைத்து, DFL உதைப்பந்தாட்ட போட்டிகள் யாவும் நெடுந்தீவு பிரதேசம் சார்ந்த அடிப்படையில் அணிகள் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு அதன்மூலம் நெடுந்தீவு மண்ணில் உதைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுப்பதும்இளைஞர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் இத்தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது.

     

Share this Article