நெடுந்தீவில் RDA இன் மூன்று படகுகளும் திருத்தப் பணியில் – தனியார் சேவை தொடர்கிறது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 03 படகுகளும் கைவிட்ட நிலையில் பல. நோ. கூ. சங்கம் மற்றும் தனியார் படகுகளே சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

குமுதினிப் படகு ஓரிரு நாட்களில் மீண்டும் சேவையில் தொடரும் என தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் நெடுந்தாரகை படகுதிருத்தத்திற்கான உபகரணம் கொழும்பில் இருந்து கொள்வனவு செய்து பொருத்த வேண்டியுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்ததுடன் வடதாரகை திருத்த வேலைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க படகு  மற்றும் தனியார் படகுகளே நெடுந்தீவு மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article