நெடுந்தீவில் Bishop Cup 2025 இறுதிப்போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான – BIshop cup 2025 இன்  இறுதிப் போட்டிகள் இன்றைய தினம் (செப். 14) சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

நிகழ்வின் விருந்தினர்கள் நெடுந்தீவு மகா வித்தியாலய மேலைத்தேய வாத்திய குழுவின் அணிவகுப்புடன் போட்டிகள் இடம்பெறவுள்ள  நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அரங்க நிகழ்வின் ஆரம்பமாக இறை ஆசீரினை வேண்டி செபத்தினை அருட்திரு சோபன்றூபஸ் அடிகளார் வழங்கியிருந்தார்.

நிகழ்வில் ஆயரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை நிகழ்வின் பிரதம விருந்தினரான  யாழ் மறை மாவட்ட கரித்தாஸ்- கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி டெனீசியஸ் அடிகளார் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மங்கள ஒளியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து இறுதிப்போட்டி நிகழ்வுகள் வரிசையில்  கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற பெண்களுக்கான கிளித்தட்டு, ஆண்களுக்கான கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளின் இறுதிப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களும் , சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான கிளித்தட்டு போட்டியில்   சென் ஜோசப் அணி வெற்றிபெற்று ஆயர் கிண்ணத்தினை வென்றதுடன்         மடு அன்னை அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

  ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் சென் கென்றி அணி வெற்றிபெற்று ஆயர் கிண்ணத்தினை வென்றதுடன்         சென் பீற்றர் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்க்கொண்டது.

மென்பந்து துடுப்பாட்டம் சென் பீற்றர்  அணி வெற்றிபெற்று ஆயர் கிண்ணத்தினை வென்றதுடன்     சென் பற்றிக் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்க்கொண்டது.

உதைபந்தாட்டம்  மடு அன்னை அணி வெற்றிபெற்று ஆயர் கிண்ணத்தினை வென்றதுடன் சென் பற்றிக் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்க்கொண்டது.

இதேவேளை பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரை , பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும் இடம்பெற்றது.

பரிசளிப்பு நிகழ்வு தலைவரும் நெடுந்தீவு பங்குத்தந்தையும் ஆகிய அருட்பணி ப. பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மறை மாவட்ட கரித்தாஸ்- கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி டெனீசியஸ் அடிகளார், நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மட தலைவி அருட்சகோதரி சுகிர்தா செல்வி, நெடுந்தீவு கடற்படை அதிகாரி , நெடுந்தீவு பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் , பாடசாலை அதிபர்கள் நலன்விரும்பிகள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது இணையத்தளம் ஊடக நேரலையில் ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article