நெடுந்தீவில் வரவேற்பு நிகழ்வும் நன்றித் திருப்பலியும்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பங்குமகனும் அமலமரித்தியாகிகள் துறவறசபையின்  அருட்பணியாளருமான அருட்பணி விமல்ராஜ் அடிகளாரின் திருநிலைப்படுத்தலின் முதல்  நன்றித் திருப்பலியும், வரவேற்பு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 6.15 மணிக்கு நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் வரவேற்பு நிகழ்வும் நன்றித் திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

புதிய அருட்தந்தை அவர்களை வரவேற்கும் வகையிலும் புதிய குருவின்ஆசீர்வாதத்தை பெறவும் நெடுந்தீவு பங்கு மக்களை புனித மரியன்னை ஆலயபங்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article