நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறைகேள் மக்கள் சந்திப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் மத்திய மாகாண அரசுகளின் அதிகாரிகளும் இணைந்து இன்றையதினம் (மார்ச் 05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின்கீழான திணைக்களங்களின் தலைவர்களும், அதற்கு மேலதிகமாக மத்தியஅரசின் கீழான இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத்திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின்பிராந்தியத் திணைக்களத் தலைவர்களும் இந்த நடமாடும் சேவையில்பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆளுநர் குழுவினர் நெடுந்தீவின் தீர்க்கப்பட வேண்டிய பல தேவைகள் தொடர்பில் நேரடி கள  விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக இடம்பெறும் சேவைகளின் தன்மை தொடர்பிலும் பெற்றுக்கொள்ள விரும்பும் சேவைகள் தொடர்பிலும் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் முன்வைக்கப்பட்டு அவற்றில் சிலவற்றுக்கான தீர்வுகள் உடனடியாகவும் தீர்த்துவைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article