வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன்நடைபெறும் நடமாடும் சேவை நாளை மறுதினம் புதன்கிழமை (05.03.2025) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரைநடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின்கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும், அதற்கு மேலதிகமாகமத்திய அரசின் கீழான இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத்திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின்பிராந்தியத் திணைக்களத் தலைவர்களும் இந்த நடமாடும் சேவையில்பங்கேற்கவுள்ளனர்.
இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக சேவைகளைபெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் நடமாடும் சேவையில்கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.