நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து 2024 இல் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட 22 மாணவர்களுக்கு “நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா ” அமைப்பினால் ரூ. 4000.00 வைப்பிடப்பட்ட வங்கிப் புத்தகம் 22 மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் மத்திய மாகாண அரசுகளின் அதிகாரிகளும் இணைந்து இன்றையதினம் (மார்ச் 05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பு நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சகலருக்குமான வைப்புக்கள் நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க கூட்டுறவு கிராமிய வங்கியில் கணக்கினை திறந்து அதன் புத்தகங்களே கையளிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.