நெடுந்தீவில் தரம் 01 இற்கு செல்லவுள்ள சிறார்களுக்கு சீருடைகள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 2025 ஆம்ஆண்டில் தரம் ஒன்றில் இணைந்து கல்வியை ஆரம்பிக்கவுள்ள 44 மழழைகளுக்கான பாடசாலை சீருடைகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால்வழங்கி வைக்கப்பட்டது.

இச் சீருடை துணி அடங்கிய பொதிகளை நெடுந்தீவில் உள்ள முன்பள்ளிகளில் வைத்து சிறார்களிடம் நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த மாணவர்களுக்கான சீருடைகளுக்குரிய நிதி அனுசரனையை  யாழ்வேம்படி மகளிர் கல்லூரியின் 2005 உயர்தரப்பிரிவு மாணவிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article