நெடுந்தீவில் சிறப்பாக நடந்து முடிந்த உள்ளூராட்சி வாரம் – 2025 பரிசளிப்பு நிகழ்வுகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபையினரால் “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்”எனும் தொனிப்பொருளைக் கொண்ட உள்ளூராட்சி வாரம் -2025 நிகழ்வுகளின்  பரசளிப்பு விழா இன்றையதினம் (செப்.23) சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ச.சத்தியவரதன் தலைமையில் நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக  நெடுந்தீவு பிரதேச செயலாளர் என். பிரபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவில் உள்ள மத குருமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

கலாச்சார மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் நெருக்குதல் மைய அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது , மையத்தினை நி்கழ்வின் பிரதம விருந்தினர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் என். பிரபாகரன் அவர்கள் நடாவினை வெட்டி ஆரம்பித்துவைத்தார்.

இன்றைய நிகழ்வுகளில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் இருந்து இவ்வருட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு இடம்பெற்றதுடன் , உள்ளூராட்சி வாரத்தின் போது இடம்பெற்ற முன்பள்ளி சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டியில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கல் , மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசில் வழங்கலும் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, கடற்படை பொறுப்பதிகாரி, மதகுருமார், நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article