நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற வாழ்விற்கான பேரொளி – அமர்வு-15

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு-15  நிகழ்வு இன்று (ஒக். 06)  சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக  இடம்பெற்றது.

இரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம், கதை கூறல்மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல், மாணவர் ஒழுக்கம் மற்றும் சிறுவர்களது திறனை வெளிக்கொணரல் என்பன நிகழ்வின் அமர்வு – 15 இல் இடம்பெற்றது.

நிகழ்வின்  வளவாளராக சனசமூக நிலையத்தின் இரகுபதி நினைவு நூலக நூலகர் திரு.யோசெப் எட்மன் லெனாட் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி”வாசிப்பு” எனும்  நிகழ்விற்கான வழிகாட்டல்மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article