நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் நடமாடும் சேவைமூலம் நடாத்தப்பட்டசாரதி அனுமதிப்பத்திரம் பெறும் எழுத்துப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தோருக்கான செயன்முறைப்பரீட்சை விரைவில் இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சார்த்திகளுக்கான தெளிவூட்டல் வகுப்பு எதிர்வரும் புதன் கிழமை(ஜூலை 16) பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்குஇடம்பெறவுள்ளது.
பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சாத்திகள் குறித்த செயலமர்வில் தவறாது கலந்துகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு நெடுந்தீவு பிரதேச செயலகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.



இதன்படி பரீட்சையில் சித்திபெற்ற 129 பேர் இதுவரையில் செயல்முறைபரீட்சைக்கு தோற்றவில்லை என்பதுடன் இவர்களுக்கான செயன்முறைபரீட்சையை நெடுந்தீவில் மிக விரைவில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.