நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பித்தோருக்கான இருநாள் பயிற்சி நிறைவு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்பு நேற்றும் (ஏப்ரல் 24) இன்றும் (ஏப். 25) நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள தேவ சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

சசிகா சாரதி பயிற்சி பாடசாலையின் வளவாளர்களால் இப் பயிற்சி நெறி மேற்கொள்ளப்பட்டதுடன்
ஊரும் உறவும் நிறுவன ஏற்பாட்டில் இலவசமாக இப் பயிற்சி வகுப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
நடமாடும் சேவை நாளையதினம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்26) காலை 9.00 மணிமுதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article