நெடுந்தீவில் கறோக்கி இசை நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட்17) !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நெடுந்தீவிலுள்ள பாடகர்களின் திறமைகளை கறோக்கி இசை நிகழ்ச்சி மூலம் வெளிக்கொணரும் நோக்கில் இன்றையதினம் சனிக்கிழமை (ஆகஸ்ட்17) நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தவத்திரு தனிநாயக அடிகள் திறந்த வெளி அரங்கில் மாலை 06.00 மணியளவில் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

ப. லீலியான் குருஸ் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி எஸ். தஜிசஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு பிரிவு தலைவர் எ. அருந்தவசீலன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன்று இடம்பெறும் கறோக்கி இசை நிகழ்ச்சி நெடுந்தீவைச் சேர்ந்த தற்போதுலண்டனில் வசித்து வரும் லோ.யோண்சனின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article