நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வமாகஒப்பந்தம் இன்றையதினம் (ஒக். 04) குறிகாட்டுவான் துறைமுகத்தில் வைத்து கையெழுத்தாகியுள்ளது

நெடுந்தீவுக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் நெடுந்தீவு பல.நோ.கூ.சங்கத்தின் கீழ் இயங்கவுள்ள நிலையில் நெடுந்தீவு பல.நோ.கூ.சங்கத் தலைவர் எ.அருந்தவசீலனுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவருக்கும் இடையிலான ஒப்பந்தம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் சாட்சி முன்னிலையில் இன்றையதினம் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், கடற்றொழி்ல் நீரியல்மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவு போன்ற கடல் கடந்துள்ள பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைவது மக்கள் வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பலன் தரஉள்ளதுடன் இது நெடுந்தீவின் அபிவிருத்திக்கான ஒரு முக்கியமானமுன்னேற்றமாகக் கருதப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.