நெடுந்தீவில் உயிருடன் பிடிபட்ட முதலை கிளிநொச்சிக்கு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் நேற்றையதினம் (ஜூலை 19) மாலை வேளை உயிருடன் பிடிபட்ட முதலை இன்றையதினம் (ஜூலை 19)  கிளிநொச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றையதினம் சற்றுமுன் கடற்படைப் படகுமூலம் குறிகாட்டுவனுக்கு கொண்டுசெல்லப்படுகின்றது.

தொடர்ந்து வாகனமூடாக கிளிநொச்சி பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த  கிணற்றில் இருந்தே நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article