நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற உமந்தாவையின் புத்தாண்டு கொண்டாட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலத்தில் உமந்தாவா மற்றும் ஸ்ரீ சதகம் ஆச்சிரம குழுவினரால் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு இன்று (ஏப்ரல்07) காலை முதல் மதியம்வரை சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. 

இதன்போது சுமார் 300  மாணவர்களிடையே புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், புத்தாண்டு ஆடைகள் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டதுடன் இந்தப் புத்தாண்டு சிறப்பு மதிய உணவு விருந்தும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்க வடக்கு மாகாண துணைப் பொலிஸ் மா அதிபர், நயினாதீவு கோயில் நிர்வாகமும் உதவி அளித்ததுடன், இலங்கை காவல்துறை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேசசெயலாளர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினர் ஆகியோருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article