நெடுந்தீவிலிருந்து நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூன்று நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக இன்று (நவம்பர் 28) விமானப்படையின் உலங்குவானூர்தியின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலையின் ஏற்பாடுகளின் அடிப்படையில், நோயாளர்கள் கே. சிவகாமிப்பிள்ளை (66 வயது, நெடுந்தீவு 03), எஸ். விக்ரோறி யேசுறாயன் (59 வயது, நெடுந்தீவு 13), ஏ. கெவின்சன் (40 வயது, நெடுந்தீவு 10) மற்றும் அவர்களுடன் வந்த மூன்று உதவியாளர்கள் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருந்து தரைவழியாக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சீரற்ற காலநிலையால் கடல்பயணங்கள் தடைப்பட்டுள்ள நிலையில், நோயாளர்களை வான்வழியாக இடமாற்றம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article