நெடுந்தீவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதேச செயலர் நேரில் பார்வையிட்டார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதிகளை நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் தலைமையிலான குழு நேரில் சென்று நிலையை பரிசீலித்துள்ளது.

வெள்ளநீர் அதிகமாக திரண்டு காணப்படும் இடங்களில் இருந்து அதை அப்புறப்படுத்துவதற்காக வாய்க்கால்கள் வெட்டி நீர்த் தேக்கம் நீக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், உதவிகள் தேவைப்படும் மக்கள் தொகைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளிலும், வடிகாலமைப்பு பணிகளில் நெடுந்தீவு பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து செயல்படுகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

Share this Article