யாழ் மாவட்டத்தின் முக்கிய தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு சுற்றுலாபயணிகளின் கவனத்தை பெற்று வரும் நிலையில் Amazing Delft – Travel guide என்னும் நூலினை ஆசிரியர் அந்தோனிப்பிள்ளை ரொனிராஐன் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

நெடுந்தீவில் உள்ள குதிரைகள் அடங்கலாக ஏனைய தொட்டுணரக் கூடியவரலாற்று இடங்கள் பற்றிய விபரத்துடன் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையானஅடிப்படை தகவல்களையும் உள்ளடக்கியதாக Delft Cultural Home Stay (DCH) இன் வெளியீடாக வெளிவந்துள்ளது.

இதேவேளை இந்நூலினை புலம்பெயர் உறவுகள் பயன்படுத்தும் வகையில் மின்இதழ் (E- Book ) வடிவிலும் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.