நாளை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நேற்றைய தினம் நெடுந்தீவினை சேர்ந்த ஒருவர் கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனால் அவர் வடதாரகைப் படகில் போக்குவரத்தினை மேற்கொண்டமையால் வடதாரகைப் படகும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்ட்டுள்ளது.

அடுத்தக கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாகவும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடனும் நாளைய தினம் வடதாரகை படகில் பணிபுரியும் ஊழியர்கள், நெடுந்தீவு 11ம் வட்டாரத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் வசிக்கும் வீட்டிற்கு அண்மையில் உள்ளவர்கள் வியாபார நிலைய உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களிடம் பீ.சீ.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எனவே தீவகத்தில் கொரோனா பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள அவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனையில் இணைந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

Share this Article