நயினாதீவு இலங்கை வங்கி உடைக்கப்பட்டுத் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு இலங்கை வங்கிக் கிளை உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது என்று தெரியவருகின்றது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை காரணமாக வங்கி பூட்டப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 29) வங்கி திறக்கப்பட்டபோது அங்கு திருட்டு நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வங்கியின் பாதுகாப்புக் கமரா சேமிப்பகமும் உடைத்துத் திருடப்பட்டுள்ளது. வங்கியில் திருடப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article