தொழிலாளர் தினத்திலாவது மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் – யாழ்.கடற்றொழிலாளர் சம்மேளனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வடக்கு கடற் தொழிலாளர்களின் பிரச்சினைகள்  உலக தொழிலாளர் தினத்திலாவது தீர்க்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்  முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.
வடக்கு கடலில் நீண்ட காலமாக சட்ட விரோதமான கடற்றொழில் முறைகள் மற்றும் கடல் அட்டை பண்ணை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு உலக தொழிலாளர்கள் தினத்திலாவது தீர்வு கிடைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கருத்துரையாடி அவர்களது பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Share this Article