தேவையற்று நடமாடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்!- பொதுஅமைப்புகள் கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக நடமாடும் குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஅமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பில் பொதுஅமைப்புகள் சில ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளதாவது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளது.

அதைக் கட்டுப்படுத்த போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஓட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சிலர் தேவையற்று நடமாடுகின்றனர்.

அவ்வாறானவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவர்களின் நடமாட்டங்கள், ஆடைகள் என்பவை சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளன.

அத்துடன் மாணவிகளுடன் சேட்டை விடுவது, விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்துதல் போன்ற குற்றச்செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

Share this Article