தேர்தல் திட்டங்களுடன் நாடு திரும்பும் பஸில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்தியே இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும், தேர்தலைச் சந்திப்பதற்கான வியூகங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சிலர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சி தலைவர்களுடனும் கூட்டணி நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article