தேசிய புத்தரிசி தின விழாவை முன்னிட்டு மன்னாரில் புத்தரிசி சேகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய ‘புத்தரிசி தினம்’ எதிர்வரும் ஏப்ரல் மாதம்  மாதம் 2 ஆம்  திகதி அனுராதபுரதில் கொண்டாடப்படவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(மார்ச் 24) புத்தரிசி சேகரிக்கும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவை நிலையங்களிலிருந்து பெறப்பட்ட புத்தரிசி அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நேற்று சம்பிரதாயபூர்வமாக மன்னார் முருகன் கமநல சேவை நிலையத்தில் வைத்து புத்தரிசி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கமநல சேவை நிலையங்களின் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article