தேங்காய் எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு – அதிர்ச்சியளிக்கும் காரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்கள் குழு ஒன்று இலட்சக்கணக்கான லீற்றர் தேங்காய் எண்ணெயை பதுக்கி வைத்து சந்தையில் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் உள்ள பல பெரும் உற்பத்தியாளர்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை இரகசியமாக மறைத்து வருவதால் எதிர்காலத்தில் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை ஆயிரம் ரூபாவாக இருக்கும் என கொழும்பு மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் சில்லறை விலை 500 ரூபாவாகக் காணப்படுகின்றது என்றும், பெரும்பாலான சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தரமற்றதாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Share this Article