துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் நடத்தும் “தீவுகளுக்கான கிண்ணம் – 2023” உதைபந்தாட்டத் தொடர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தீவுகளுக்கான கிண்ணம் – 2023 உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது.

தீவக உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வேலணை துறையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அனுரணையுடனும், துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்தப்படவுள்ள இந்தச் சுற்றுப்போட்டி நாளையும், எதிர்வரும் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளிலும் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் பகல், இரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் தீவக லீக்கில் பதிவு செய்யப்பட்ட் விளையாட்டுக் கழகங்களைத் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article