தரை தட்டிய கப்பலை மீட்க இலங்கை வந்த இந்தியக் கப்பல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைப் பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று நேற்று(ஜூலை 8) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கிக் கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கரை தட்டியுள்ளது.

குறித்த கப்பலில் 11 பணியாளர்கள் இருந்தனர் என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

Share this Article