எல்லைதாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்களின் நான்கு படகுகள் விடுவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கையகப்படுத்தப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 4 படகுகள் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புச் செலவைச் செலுத்தி அவர்கள் படகுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஊர்காவற்றுறை நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கையகப்படுத்தப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்குகள் விசாரணைக்கு எடுக்கபட்ட நிலையில், 4 படகுகள் விடுவிக்கப்பட்டன. 4 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. இரு படகுகளுக்கான வழக்கு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.

Share this Article