Tuesday, December 6, 2022

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Must Read

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் கூறினர்.

 தீ மூட்டியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக குறித்த பெண் கடந்த 17ஆம் திகதி தனக்குத் தானே தீ மூட்டியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

நெடுந்தீவினை சொந்த இடமாக காண்ட குறித்த பெண் திருமணமாகி நாந்துறையில் வசித்து வந்துள்ளார்

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img