ஜனவரி, பெப்ரவரியில் 850 பேருக்கு டெங்கு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்.மாநகர பிரதேசத்தில் இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 850 பேர்வரையில் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 670 பேரும், பெப்ரவரியில் 180 பேரும் இவ்வாறு டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தின் கடந்த மூன்று நாள்களில் பத்துப் பேர் வரையில் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை தற்போதைய வரட்சியான காலநிலையால் டெங்கின் தாக்கம் குறைவடைகின்றது என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்தது.

Share this Article