ஜனவரி ஒன்று முதல் மின் கட்டண உயர்வு நடைமுறை! – அரசாங்கம் திட்டவட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை மின்சாரசபையின் முன்மொழிவுகளுக்கு அமைய ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன, மின் கட்டண உயர்வுக்கு அமைச்சரவையைத் தவிர்த்து வேறு எந்தத் தரப்பின் அனுமதியும் அவசியமற்றது என்று தெரிவித்தார்.

முன்மொழிவுகளில் திருத்தங்கள் காணப்படின் அவற்றை பெப்ரவரி 15 க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Share this Article