சொர்க்க தீவாக மாற்ற வேண்டும் – உத்திக பிரேமரத்ன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ். குடாநாட்டில் உள்ள பல தீவுகளில் ஒரு தீவை சொர்க்க தீவாக மாற்ற வேண்டும் என நடிகரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான உத்திக பிரேமரத்ன (25) பாராளுமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளார்.

அத்தகைய தீவு பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும், இது இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்க உதவும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன மேலும் கூறுகையில் கொழும்பு துறைமுக நகரத்தை போன்று ஒரு நிலப்பரப்பை உருவாக்கி கடல் ஓரமாக மிருகக்காட்சிசாலையை அமைக்க ஆலோசனை வழங்கினார்.

இதன் மூலம் கடலால் சூழப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட மிருகக்காட்சிசாலையை நிறுவிய முதலாவது நாடாக இலங்கை மாறும் எனவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this Article