சிறுவர் நெருக்கடி தொடர்பில் மன்னாரில் முக்கிய கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் தற்போது சிறுவர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற நெருக்கடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர்கள் தொடர்பிலான சம்பவங்கள் மற்றும் குறித்த தகவல்களின் உண்மை நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாகவும் சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வுகள் வழங்குல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ பொறுப்பதிகாரிகள், காவல் நிலைய தலைமை பொறுப்பதிகாரிகள் (தலைமன்னார் மற்றும் மன்னார்), வலையக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம சேவகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article