சிறப்புற இடம்பெற்ற வேலணை மத்திய கல்லூரியின் ஆசிரியர்தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியில் நேற்று (ஒக்ரோபர் 6) வெகுசிறப்பாக ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத்தின் தலைவர் உ.யுவராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவின் பிரதம விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் கு.கணேசலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மாணவர்களின் கலை நிகழ்வுகள் , ஆசிரியர், விருந்தினர் கெளரவிப்பு , ஆசிரியர் கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றதுடன் இந்நிகழ்வில்
பாடசாலை முகாமை அணியினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

\

Share this Article