சிறப்புற இடம்பெற்ற நற்குண முன்னேற்ற அமைப்பின் நெடுந்தீவுப் பிரதேசநிலைய ஆரம்ப நிகழ்வு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நற்குண முன்னேற்ற அமைப்பினரது நெடுந்தீவுப் பிரதேச நிலையத்தினுடைய உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு மற்றும் நிலைய திறப்பு விழா என்பன கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலையில்  சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நற்குண முன்னேற்ற அமைப்பின் நெடுந்தீவுப் பிரதேச நிலைய அனுசரணையாளர் ,  நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்கள் நிலைய  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் வரவேற்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

அரங்க நிகழ்வுகளில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் வாழ்த்துரை , சிறப்புரைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நிலையத்தில் கற்கும் மாணவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள்அவர்களது பெற்றோர்கள் , ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article