சிறப்பாக இடம்பெற்ற மாவலித்துறை வித்தியாலய சிறுவர் தினம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மாவலித்துறை றோ.க. த. க. வித்தியாலயத்தின் சிறார்களை கௌரவிக்கும் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.


வித்தியாலய அதிபர் அரிகரன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர்
ஜே. மகிந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

விருந்தினர்கள் மற்றும் சிறார்கள் சிறப்பாக நிகழ்வு மண்டபத்திற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து மாணவர்களுக்கான முட்டி உடைத்தல் , தலையணைச் சண்டை மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது சிறப்புரைகள் , வாழ்த்துரைகள் என்பவற்றுடன் கலை நிகழ்வுகளும் , பரிசில் வழங்கலும் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article