சிறப்பாக இடம்பெற்ற “நெடுந்தீவு பசுமை இயக்கம்” ஆரம்ப நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“நெடுந்தீவு பசுமை இயக்கம்”  ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் (நவம்பர் 01) நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்றது

நெடுந்தீவு கிழக்கு முருகன் ஆலய முன்றலில் நெடுந்தீவு பசுமை இயக்கத்தின் தலைவர் உ. மதுவண்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் நடராசா பிரபாகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புங்குடுதீவு சூழலியல் மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் க. நாவலன், நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் செயலாளர் சோ.தம்பிராசா, நெடுந்தீவு நவரட்ணசிங்கம் அறக்கட்டளை நிறுவுனர் இ. மருதநாயகம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக நெடுந்தீவில் மத குருமாரும் கலந்து சிறப்பித்ததுடன் வாழ்த்துரைகளையும் வழங்கியிருந்தனர்

இதன்போது “நெடுந்தீவு பசுமை இயக்கம்” நிர்வாக சபையினர் அறிமுகம், மரக்கன்றுகள் வழங்கல், விருந்தினர்கள் உரை என்பன சிறப்பாக இடம்பெற்றது

Share this Article