நெடுந்தீவு தெக்காட்டு முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் திருவிழா – 2025 சிறப்பாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றையதினம் (ஜூலை 10) மாலை பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றதுடன் , சிறப்பு பூசை வழிபாடுகளும் இன்று (ஜூலை 11) காலை வரை பக்திபூர்வமாக இடம்பெற்றது.


பெருமளவு பக்தர்கள் தங்களின் நேரத்திக் கடன்களை தீர்க்க பொங்கல் வைத்து வேண்டுதல் செய்ததுடன் , அங்கப்பிரிதிஷ்டையும் செய்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை முத்துமாரி அம்மன் சிங்க வாகனத்தில் ஏறி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.