நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வருடாந்தப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தேர்வும் நாளை சனிக்கிழமை (டிசம்பர் 12) காலை 10.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறத் தீர்;மானித்திருந்தது.
சனசமூக நிலையத்திற்கு அருகில் வசித்து சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பங்களிப்பு ஆற்றி வந்த திரு.சு.கோபாலசிங்கம் அவர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) இயற்கை எய்தியுள்ளார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.
அன்னாரது மரண நிகழ்வின் காரணமாக பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் எதிர்வரும் 19.12.2020 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது என நிலையத்தின் தலைவர் திரு.தி.கிரிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.