சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாநகர சபை எல்லை, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர சபையினருக்கு தெரியப்படுத்தியும், இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அசட்டையீனமாக செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வெள்ளம் வடிந்து செல்லும் வாய்க்காலில், தனிநபர் ஒருபர், ஒரு பகுதியை கையகப்படுத்தி மதில் கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதால், தமது பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி, மாரி காலத்தில் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share this Article