சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட இந்திய பிரஜை ஒருவர் உட்பட்ட இருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு இளையார்குடியைச் சேர்ந்த 38 வயதுடைய குறிந்த நபர் 2020 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சமயம் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது அவரின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அவர் குருநாகலைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் மன்னாருக்கு வந்து அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share this Article