க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயினும் பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

திகதி, பாடநெறி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொரோனாத் தொற்றுக் காரணமாக பரீட்சை நடவடிக்கைகள் தடைபட்டதை அடுத்து பரீட்சை அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article