கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் தற்போது கொரோ பரவலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த வாரம் சுவாச நோய் காரணமாக அவதிப்பட்ட நிலையில் நெடுந்தீவில் இருந்து அம்புலன்ஸ் படகு ஊடாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (செப்ரம்பர் 02) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

நெடுந்தீவு கிழக்கு பகுதியினை சேர்ந்த அமிர்தரத்தினராசா இராசயோகன் என்பவரே இவ்வாறான கொரோனா கொடிய நோய்க்குள் அகப்பட்டு காலமாகியுள்ளார்.

Share this Article