கொக்குத்தொடுவாய் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் (நவம்பர் 25) 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

முல்லைத்தீவு – கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழி அகழ்வின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமானது.

ஆறாவது நாளான நேற்றும் அகழ்வு பணி தொடர்ந்தது இந்த நிலையில், நேற்றைய 5 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டன.

அத்துடன், இலக்கத் தகடு, மணிக்கூடு, துப்பாக்கி சன்னங்கள் என்பனவும் மீட்கப்பட்டன என்று முல்லைத்தீவு பொது மருத்துவமனை யின் சட்ட மருத்துவ அதிகாரி க. வாசு தேவா தெரிவித்தார்.

இதேநேரம், இன்று ஞாயிற்றுக் கிழமை அகழ்வுப் பணிகள் நடை பெறாது என்றும் நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொட ரும் எனவும் அவர் கூறினார்.

Share this Article